2026 மே 04, திங்கட்கிழமை

கிழக்கு மாகாண இஸ்லாமிய பிரமுகர்கள் - கோட்டாபய சந்திப்பு

Menaka Mookandi   / 2013 மார்ச் 06 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.நூர்டீன்

கிழக்கு மாகாண இஸ்லாமிய சமய சமூகப் பிரமுகர்களுக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று வியாழக்கிழமை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சர்வமத சமயங்களின் பேரவைத் தலைவரும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் செயலாளருமான மௌலவி ஏ.எம்.அப்துல்காதர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி, ஏறாவூர் மற்றும் ஓட்டமாவடி ஆகிய மூன்று பிரதேசங்களில் இருந்தும்  தலா ஒருவர் வீதம் இந்த சந்திப்புக்காக அழைக்கப்பட்டுள்ளதாகவும் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பாதுகாப்பு அமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் மௌலவி ஏ.எம்.அப்துல்காதர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0

  • Suff Wednesday, 06 March 2013 01:17 PM

    பிரித்தாழும் கொள்கை. விழிப்பாயிருங்க!

    Reply : 0       0

    abdul Wednesday, 06 March 2013 02:48 PM

    என்ன கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மட்டுப்படுத்த பட்டுள்ளதா?

    Reply : 0       0

    vallarasu Wednesday, 06 March 2013 03:36 PM

    கிழக்கு மாகாணத்தை, த தே கூ +ஸ்ரீல மு கா உம் ஆட்சி செய்தால் யாரும் அசைக்க முடியாதுதானே. இப்ப விளங்குதா??

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .