2026 மே 04, திங்கட்கிழமை

சிறுமி கடத்தப்பட்டு காதுத் தோடு அபகரிப்பு

Suganthini Ratnam   / 2013 மார்ச் 07 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்,-தேவ அச்சுதன்

ஐந்து வயதான பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்டு அவரின் காதுத் தோடு அபகரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் குறித்த மாணவியின் பெற்றோர் நேற்று புதன்கிழமை பொலிஸில்   முறைப்பாடு செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீராகேணிப் பகுதியிலேயே நேற்று புதன்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காலையில் தனது வீட்டிலிருந்து பாடசாலைக்கு குறித்த மாணவி நடந்து வந்துகொண்டிருந்தபோது, அந்த வழியால் வந்த நபர் ஒருவர் குறித்த மாணவியை தனது சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வேறொரு பக்கமாக அழைத்துச் சென்று குறித்த மாணவி காதில் போட்டிருந்த தங்கத் தோட்டை கழற்றி எடுத்து விட்டு அவரை அந்த இடத்திலேயே விட்டுச் சென்றுள்ளார்.

இந்த நிலையில், குறித்த மாணவி அழுதவாறு இடம்தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தபோது அந்த வழியால் வந்த பிறிதொரு நபர் சிறுமியை பாடசாலையில்  கொண்டுவந்து சேர்ப்பித்துள்ளார்.

இதன் பின்னரே குறித்த மாணவி கடத்தப்பட்டு அவர் போட்டிருந்த காதுத் தோடு அபகரிக்கப்பட்ட சம்பவம் தெரியவந்ததாக அந்தச் சிறுமி கல்வி கற்கும் பாடசாலையின் பாடசாலையின் அதிபர்  தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .