2026 மே 04, திங்கட்கிழமை

குழந்தையை கொன்ற குற்றச்சாட்டில் பெண் கைது

Kogilavani   / 2013 மார்ச் 07 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எஸ்.வதனகுமார்

மட்டக்களப்பு, நாவற்காடு பகுதியில் பெண்ணொருவர், குழந்தை ஒன்றை பிரசவித்து அதனை கொன்று புதைத்த குற்றச்சாட்டில் வவுணதீவு பொலிஸாரினால்; கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. வவுணதீவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் சிசுவின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன் சிசுவின் சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் இவ்வாறான ஏழு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .