2026 மே 04, திங்கட்கிழமை

எல்லே போட்டியில் வெற்றியீட்டிய அணி மீது தாக்குதல்; மூவர் காயம்

Suganthini Ratnam   / 2013 மார்ச் 07 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்

விளையாட்டு அணி ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மாணவர்கள் மூவர் காயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு, கல்லடி பகுதியிலேயே நேற்று புதன்கிழமை மாலை இந்தத் தாக்குதல்ச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வலய மட்ட எல்லே விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி மாகாணப் போட்டிக்குத் தகுதி பெற்ற பாடசாலை அணி ஒன்றின் மீதே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்கு உள்ளான  மாணவர்களின் பாடசாலை அதிபர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்தத் தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள் மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .