2026 மே 04, திங்கட்கிழமை

தீவிர விபத்துச் சேவைச் சிகிச்சைப் பிரிவை ஆரம்பிக்க முயற்சி

Super User   / 2013 மார்ச் 07 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நான்கு மாடிகள் கொண்ட தீவிர விபத்துச் சேவைச் சிகிச்சைப் பிரிவை ஆரம்பிக்கும் கருத்திட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வைத்தியசாலையின் செயற்பாட்டுக் குழுத் தலைவர் வைத்தியர் க.முருகானந்தன் தெரிவித்தார்.

இதற்காக அவுஸ்திரேலியாவிலுள்ள விசேட எலும்பு முறிவுச் சத்திர சிகிச்சை நிபுணரான வைத்தியர் டேவிட் யங் தலைமையிலான விசேட குழுவினர் உதவ முன்வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

முதற்கட்டமாக உலகளாவிய ரீதியில் வர்த்தக சமூகங்களிடமிருந்து 200 மில்லியன் ரூபாய்களை இலக்கு வைத்து நிதியைத் திரட்டும் பணியில் வைத்தியர்  டேவிட் யங் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் கொழும்பு வாழ் வர்த்தக சமூகத்திடமும் நிதி சேகரிக்கும் முயற்சிகள் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன. இதேபோன்று மட்டக்களப்பு வர்த்தக சமூகத்திடமிருந்தும் தாராளமான நிதியுதவிகளை தாங்கள் எதிர்பார்த்து நிற்பதாக வைத்தியர்  முருகானந்தம் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .