2026 மே 04, திங்கட்கிழமை

'குட்வின் சந்தி' 'குர்ஆன் சதுக்கமாக' மாற்றம்

Kogilavani   / 2013 மார்ச் 07 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-
ஜவ்பர்கான்


மட்டக்களப்பு காத்தான்குடி குட்வின் சந்தி அலங்காரமிக்க குர்ஆன் சதுக்கமாக அபிவிருத்தியடைந்து வருகின்றது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் விசேட வேலைத்திட்டத்தின் கீழே இந்த அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி குட்வின் சந்தியில் அமைக்கப்பட்டுவந்த அலங்கார கோபுரம், வடிகாண் திட்டம் தொடர்பான அபிவிருத்திப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

காத்தான்குடி முகைதீன் மெத்தைப்  பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல்  நிர்வாக சபையினருக்கும் காத்தான்குடி நகர சபைக்குமிடையில் சட்டவிரோத கட்டங்கள் தொடர்பில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினைத் தொடர்ந்து சுமார் ஒரு வருடங்களுக்கும் மேலாக இந்த அபிவிருத்திப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பாக காத்தான்குடி முகைதீன் மெத்தைப்  பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல்  நிர்வாகத்தினர் வழக்குத் தாக்கல் செய்தனர். வழக்கின் இறுதிதீர்ப்பு 01.03.2013 அன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி சிவபாதசுந்தரத்தினால் வழங்கப்பட்டது.

அத்துடன் வழக்கு தொடர்பான நகர சபைக்கான செலவினங்களை பள்ளி நிர்வாக சபை வழங்க வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டதுடன்  மேற்படி வழக்கு  தள்ளுபடி செய்யப்பட்டது.

வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து  காத்தான்குடி குட்வின்சந்தி குர்ஆன் சதுக்கமாக மாறுவதற்கான அபிவிருத்திப் பணிகள்; துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் வழிகாட்டலில் காத்தான்குடி நகரசபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




  Comments - 0

  • vallarasu Saturday, 09 March 2013 07:17 AM

    நாமதான் பிரச்சினையை ஆரம்பிக்கிறது. பிறகு சிங்கள‌வர்கள் முடிச்சு வைக்கிறது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .