2026 மே 04, திங்கட்கிழமை

பாலியல் வல்லுறவிற்குட்படுத்தியவர் கைது

Super User   / 2013 மார்ச் 07 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன், ஏ.எச்.ஏ.ஹுஸைன்

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பழுகாம் பிரதேசத்தில் பெண்ணொருவரை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மனைவியின் தங்கையை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

15 வயதான தனது மனைவியின் தங்கையை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தில் 29 வயதான நபரே நேற்று புதன்கிழமை களுவாஞ்சிக்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை நடைபெற்று வரும் அதேவேளை சந்தேகநபரை களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .