2026 மே 04, திங்கட்கிழமை

புதிய நடைமுறைகளை உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம் கைகொள்ள வேண்டும்

Kogilavani   / 2013 மார்ச் 08 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம் தனது கடந்தகால சம்பிரதாய நிலைப்பாடுகளைக் கைவிட்டு புதிய நடைமுறைகளைக் கைக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் புதிய நிர்வாக சபையினரைச் நேற்று வியாழக்கிழமை அவரது காரியாலயத்தில் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மட்டக்களப்பு உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம் முதல் கட்டமாக மட்டக்களப்பில் செயற்படும் சகல அரச சார்பற்ற நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து அவற்றின் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக் கூறும் தன்மையையும் அதிகரித்துக் கொள்ளவேண்டும்.

அதற்கு உதவும் வகையில் முதல் கட்டமாக இணையத்திற்கு ஒரு காரியாலயத்தினை பெற்றுக் கொள்வதற்கு உதவுவதுடன் அதற்கான தளபாட வசதிகளையும் தான் ஏற்பாடு செய்து தருவதாகவும் மட்டக்களப்பு உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் நிர்வாகத்தினரிடம் உறுதியளித்துள்ளார்.

இச்சந்திப்பின்போது, இணையத்தின் நிறுவனங்கள் சர்வதேச நிறுவனங்களின் செயற்பாடுகள் காரணமாகவும், உள்ளூர் அதிகாரிகளின் புறக்கணிப்புகள் காரணமாகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதன் காரணமாக மட்டக்களப்பு உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் பல்வேறு நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் எதிர்கொண்டுள்ளதாக முன்னாள் முதலமைச்சருக்கு இணையத்தின் நிர்வாகத்தினரால் எடுத்துக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .