2026 மே 04, திங்கட்கிழமை

மைத்திரிபாலவின் மகனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Kanagaraj   / 2013 மார்ச் 08 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஸரீபா, எம்.சுக்ரி


சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் மகனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை ஜுன் மாதம் 20ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

பிரதிப்பொலிஸ் மா அதிபர் வைத்தியலங்காரவின் மகன் அசேல தாக்கப்பட்டது தொடர்பிலேயே அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் றியாழ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கல்குடா பொலிசார் விசாரணை அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

இதன்போது,சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் மகனின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி என்.எம்.சஹீட்,

இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸ் விசாரணை நிறைவடைந்துள்ளதாகவும் இது சிறிய குற்றம் என்பதால் இதை வாழைச்சேனை மத்தியஸ்த சபைக்கு போடுமாறு விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக அவர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

வழக்கை விசாரணை செய்த நீதிபதி றியாழ் வழக்கை ஜுன் மாதம் 20ம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன் மத்தியஸ்த்த சபையின் அறிக்கையை ஜுன் 20ம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.

சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் மகனுக்கும் பிரதிப்பொலிஸ் மா அதிபர் வைத்தியலங்காரவின் மகன் ஆகியோருக்கிடையில் கடந்த பெப்ரவரி மாதம் 24ம் திகதி பாசிக்குடாவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் கைகலப்பு இடம் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் சட்டத்தரணிகளான அமைச்சர் பைசர் முஸ்த்தபா, லலித் திஸாநாயக்க,
என்.எம்.சஹீட் அகியோர் ஆஜராகியிருந்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .