2026 மே 04, திங்கட்கிழமை

பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதாரக் கடன் திட்டம்

Kogilavani   / 2013 மார்ச் 09 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


வாகரையில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதாரக் கடன் திட்டம் ஒன்று அமுலாக்கப்பட்டு வருகின்றது.

இதன் முதற்கட்டமாக 32 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு கடன்களுக்கான பணக் காசோலைகள் வழங்கப்பட்டன.

வாகரையில் உள்ள 16 கிராம சேவகர் பிரிவுகளிலிருந்து மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் எனும் மதிப்பீட்டின் அடிப்படையில் இந்தக் குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள்.

சர்வதேசப் பெண்கள் தினத்தையொட்டி வாகரை மத்திய மகா வித்தியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்நிகழ்வில் வாகரைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி.கே.பாலித்த, வாகரை இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் சாந்தகுமார, சமூர்த்தித் திட்ட முகாமையாளர் மேனகா பாஸ்கரன் ஆகியோர் இந்தக் காசோலைகளை பயனாளிகளிடம் கையளித்தனர்.

10 ஆயிரம் ரூபாவிலிருந்து ஆகக் கூடிய தொகையாக 35 ஆயிரம் ரூபா வரையில் இந்தக் கடன் திட்டம் அமைந்திருக்கின்றது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .