2026 மே 04, திங்கட்கிழமை

இந்திய அரசின் உதவித் திட்டத்தின் கீழ் மட்டு. மாவட்டத்தில் அபிவிருத்தி

Super User   / 2013 மார்ச் 11 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


இந்திய அரசின் உதவித்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது மட்டக்களப்பின் அபிவிருத்தியும் அழகுபடுத்தலும் திட்டத்தின் கீழேயே மேற்கொள்ளப்படவுள்ளது என மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

தலா 10 மில்லியன் ரூபாய் செலவில் வெல்லாவெளி, வவுணதீவு மற்றும் கிரான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்றப்பட்டு அடிப்படை வசதி இன்றி வாழ்பவர்களுக்கு வீடுகள் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தர தேசிய பாடசாலையின் அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
பாடசாலை அதிபர் ஆர். கனகசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

"350,000 பேருக்கு விரைவில் குழாய் நீர் வசதியும் துறைநீலாவணை கிராமத்திற்கு குடிநீர் வசதிக்கு 10 கோடி ஒதுக்கீடும்  50 கோடி ரூபாய் திருப்பெருந்துறையில் சேகரிக்கப்பட்டுள்ள குப்பைகளை கொடுவாமடுவிற்கு கொண்டு சென்று உயிரியல் சேதன பசளையாக மாற்றும் பொறிமுறை ஆகியவற்றுக்கு ஒதுக்கப்படவுள்ளது.

வின்சன்ட் உயர்தர மகளிர் தேசிய ஆரம்ப பாடசாலைக்கு கட்டிடம் அமைத்தல், வடிகான் வசதி, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் விஞ்ஞான ஆய்வு கூட உபகரண வசதிகள் பற்றி இதன்போது பிரதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி வசதிகளை ஏற்படுத்தி தருவதாக அவர் உறுதியளித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .