2026 மே 04, திங்கட்கிழமை

வாகரை மகா வித்தியாலயத்திற்கான மின் விநியோகம் ஒரு மாத காலமாக துண்டிப்பு

Super User   / 2013 மார்ச் 12 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்

வாகரை மகா வித்தியாலயத்திற்கான மின் விநியோகம் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக துண்டிக்கப்பட்டுள்ளது என பாடசாலை அதிபர் எஸ்.அரசரெட்ணம் தெரிவித்தார்.

இதனால் குடிநீர் உட்பட பல அடிப்படை பிரச்சினைகளை எதிர் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.அத்துடன் மலசலகூடம் மற்றும் பாடசாலைக்கான அழகுத் தாவரங்களின் பராமரிப்பு மற்றும் இதர தேவைகளுக்கான நீரின்றி கடும் அசௌகரியத்தை எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

வாகரை மகா வித்தியாலயத்தில் தற்சமயம் முதலாம் தரத்திலிருந்து உயர் தரம் வரையாக உள்ள வகுப்புக்களில் 664 மாணவர்களும் 31 ஆசிரியர்களும் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வாகரை மகா வித்தியாலயத்திலிருந்து மாதாந்தம் செலுத்த வேண்டிய மின் கட்டணம் தொடர்ந்து நிலுவையாக உள்ளது. இதனாலேயே பாடசாலைக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது என வாழைச்சேனை மின்சார வழங்கல் பிரிவின் மின் அத்தியட்சகர் என். சோதிராஜன் தெரிவித்தார்.

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகச் செலுத்தப்படாத நிலுவை பணம்  சுமார் 75,000 மேற்பட்டிருப்பதாலேயே வாகரை மகா வித்தியாலயத்திற்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .