2026 மே 04, திங்கட்கிழமை

சந்திவெளி சித்தி விநாயகர் கனிஷ்ட வித்தியாலய புதிய கட்டட அடிக்கல் நடும் நிகழ்வு

A.P.Mathan   / 2013 மார்ச் 12 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு – சந்திவெளி சித்தி விநாயகர் கனிஷ்ட வித்தியாலய புதிய கட்டட அடிக்கல் நடும் நிகழ்வு பாடசாலை அதிபர் எஸ்.சிவசுந்தரம் தலைமையில் நேற்று பகல் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மீள்குடியேற்றத்துறை பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கல்குடா வலய கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீகிருஸ்ணராஜா, கல்குடா வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாத்தா குலேந்திரகுமார், ஏறாவூர்ப்பற்று 2 கோட்டக்கல்வி அதிகாரி ஆ.சுகுமாரன், வாகரை கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.பரமேஸ்வரன், மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் பிரத்தியேக செயலாளர் பொன்.ரவீந்திரன், பணிப்பாளர் கே.சத்தியவரதன் உட்பட கல்வித் திணைக்கள மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

60 இலட்சம் ரூபா செலவில் 1000 பாடசாலை அபிவிருத்திதிட்டத்தின் கீழ் இப்பாடசாலையில் புதிய கட்டடம் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .