2026 மே 04, திங்கட்கிழமை

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கமநல அமைப்புகளுக்கு உழவு இயந்திரங்கள் கையளிப்பு

Menaka Mookandi   / 2013 மார்ச் 12 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட கமநல அமைப்புக்களுக்கு இரு சக்கர உழவு இயந்திரங்கள் மானியமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு நேற்று செவ்வாய்கிழமை இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஐந்து சங்கங்களுக்கு இந்த உழவு இயந்திரங்கள் கையளிக்கப்பட்டன. தலா மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான ஐந்து உழவு இயந்திரங்கள் இதன்போது வழங்கப்பட்டன.

இதுபோன்று கடந்த வருடமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பத்து கமநல அமைப்புக்களுக்கு இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினால் பத்து இரு சக்கர உழவு இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .