2026 மே 04, திங்கட்கிழமை

கல்லடி பாலம் திறப்பில் ஜனாதிபதி கலந்துகொள்வார்

Kogilavani   / 2013 மார்ச் 13 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்
, எஸ்.பாக்கியநாதன், எம்.எஸ்.நூர்தீன்

நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு கல்லடி பாலம் எதிர்வரும் 22ஆம் திகதி ஜனதிபதியினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் இறுதிக் கட்ட நிர்மாண வேலைகளை பிரதியமைச்சர் முரளிதரன் நேற்று முன்திம் சென்று பார்வையிட்டதன் பின்னரே இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையின் வாவிக்கு மேலால் அமைக்கப்பட்ட பாலங்களில் 3வது பெரிய பாலமாக கல்லடி பாலம் சரித்திரத்தில் இடம்பிடித்துள்ளது.

ஏற்கெனவே மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் 5 பாலங்கள் அமைக்கும் திட்டத்தின் கீழ் 4 முடிவுற்ற நிலையில் 5 ஆவது பாலமான வாகரை பனிச்சங்கேணிப் பால நிர்மாண வேலைகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .