2026 மே 04, திங்கட்கிழமை

கைவிடப்பட்ட குழந்தை மீட்பு

Super User   / 2013 மார்ச் 13 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.நூர்தீன்


காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட குழந்தையொன்று காத்தான்குடி பொலிஸாரிடம் இன்று புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள வீதியொன்றின் மரத்தடியின் கீழிருந்தே அந்த குழந்தை இன்று மாலை 6 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸாருக்கு இதை தெரியப்படுத்தியதையடுத்து, ஸ்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸாரிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.

பொலிஸார் இக்குழந்தையை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கைவிடப்பட்ட குழந்தை ஆண் குழந்தை எனவும் இக்குழந்தைக்கு சுமார் ஐந்து மாதம் இருக்கலாம் என தெரிவித்த காத்தான்குடி பொலிஸார், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .