2026 மே 04, திங்கட்கிழமை

வீதி பாதுகாப்பு தொடர்பான பயிற்சிப்பட்டறை

Kogilavani   / 2013 மார்ச் 14 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.நூர்தீன்


'வீதி விபத்துக்களை நிரந்தரமாக தடுப்போம்' எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி பாதுகாப்பு தொடர்பான பயிற்சி பட்டறைகள் நடாத்தப்பட்டு வருகின்றன.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் பொலிஸாரின் அனுசரணையுடன் இப்பயிற்சி பட்டறைகள் நடாத்தப்படுகின்றன.

காத்தான்குடி பிரதேசத்திலுள்ள வாகன சாரதிகள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் சாரதிகளுக்கான பயிற்சி பட்டறை நேற்று புதன்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.ரணசிங்க தலைமையில் நடைபெற்ற இந்தபயிற்சி பட்டறையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஆர். டபிள்யு. எம்.ரூபசிங்க மற்றும் ஆணைக்குழுவின் ஓய்வுபெற்ற அதிகாரி சேமலரட்ன உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, வீதி விபத்துக்களை நிரந்தரமாக தடுப்பது தொடர்பான விரிவான விளக்கங்கள் சாரதிகளுக்கு வழங்கப்பட்டதுடன் முறையான போக்குவரத்துக்கு தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.









  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .