2026 மே 04, திங்கட்கிழமை

தொலைக்காட்சி அலைவரிசை விற்பனை நிலையம் முற்றுகை

Menaka Mookandi   / 2013 மார்ச் 14 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.நூர்தீன்

மட்டக்களப்பில் தொலைக்காட்சி அலைவரிசைகளை (கேபிள் டி.வி.) விற்பனை செய்து வந்த இடமொன்றை முற்றுகையிட்ட மட்டக்களப்பு பொலிஸார், அங்கிருந்த சில கருவிகளை கைப்பற்றியதாக் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு - திருகோணமலை வீதியிலுள்ள வீடொன்றிலும், மட்டக்களப்பு ஞானசூரியம் சதுக்கத்திலுமுள்ள வீடொன்றிலும் சட்டவிரோதமாக தொலைக்காட்சி அலைவரிசைகளை (கேபிள் டி.வி.) விற்பனை செய்வதாக மட்டக்களப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மட்டக்களப்பு பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்று சோதனை செய்த பின்னர் அங்கிருந்த சில கருவிகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இங்கிருந்து ரிஸிவர் மற்றும் அதற்கு பயன்படுத்திய தொலைக்காட்சி பெட்டிகள் உட்பட அதனோடு தொடர்புபட்ட கருவிகளை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட இக்கருவிகள், மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன் கைது செய்யப்பட்டட்டவர்களிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் அவற்றை அவர்களிடம் கையளித்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதன்போது, தொலைக்காட்சி அலைவரிசைகளை (கேபிள் டி.வி.) விற்பனை செய்வதற்கான அனுமதிப் பத்திரங்கள் அடங்கிய ஆவணங்களை மேற்படி உரிமையாளர்கள், மட்டக்களப்பு பொலிஸாரிடம் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .