2026 மே 04, திங்கட்கிழமை

கடத்தப்பட்ட குழந்தையே கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது

Super User   / 2013 மார்ச் 14 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.நூர்தீன்

காத்தான்குடியில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை கடத்தப்பட்டு கைவிடப்பட்ட குழந்தையென ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.

குறித்த குழந்தை புதுக்குடியிருப்பு ஆயுர்வேத வைத்தியசாலையின் முன்பாகவுள்ள வீதியில் முந்திரியம் மரமொன்றின் கீழிருந்து நேற்று புதன்கிழமை மீட்கப்பட்டது.

அக்குழந்தை கொக்கட்டிச்சோலை - அரசடித்தீவு, கோவில் வீதியை சேர்ந்த சிவகுமார் கிருஸ்ணாதேவி என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

ஆறு மாதமுடைய சிவகுமார் விதுசன் எனும் தனது குழந்தையை மட்டக்களப்பில் வசிக்கும் நபரொருவர்  கொக்கட்டிச்சோலையிலிருந்து நேற்று மாலை கடத்தி சென்றுவிட்டதாக  குழந்தையின் தாய் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தனக்கும் குழந்தையை கடத்திய நபருக்கும் இடையில் இருந்த நகை தொடர்பிலான கடன் விவகாரத்தினால் குழந்தை விதுசனை அவர் கடத்திச்சென்றதாக கிருஸ்ணா தேவி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

மீட்கப்பட்ட இந்த குழந்தையை மட்டக்களப்பு நீதிமன்றத்தின் ஊடாக குழந்தையின் தாயிடம் கையளிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த குழந்தையை கடத்திய சந்தேக நபர் இன்னும் கைது செய்யப்படாத நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .