2026 மே 04, திங்கட்கிழமை

போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு

Kogilavani   / 2013 மார்ச் 15 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாநகர சபையினால் 2010, 2012ஆம் ஆண்டுகளில் மாநகர சபைக்குட்பட்ட பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட பொது அறிவு, சித்திரம் மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான  பரிசளிப்பு விழா நேற்று மாநகர சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகர சபையின் உதவி மேயர் ஆபிரகாம் ஜோர்ஜ்பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உதவி மேயர், மாநகர சபையின் கணக்காளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் ஏ.குணசேகரம் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

சிறுவர்களின் வரவேற்பு நடனம் என்பவற்றுடன் முறையே 1,2,3 ஆம் இடங்களைப் பெற்ற பாடசாலைகளான கறுவேப்பங்கேணி விபுலானந்தா வித்தியாலயம், மட்டக்களப்பு இந்துக் கல்லூரி, கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை என்பன பரிசுக்களை பெற்றுகொண்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .