2026 மே 04, திங்கட்கிழமை

மொழிக் கொள்கைகள் தொடர்பான கலந்துரையாடல்

Kogilavani   / 2013 மார்ச் 15 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ் பாக்கியநாதன்
, தேவ அச்சுதன்

தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டுக்கான அமைச்சினால் நடாத்தப்பட்ட சிங்களம் மற்றும் தமிழ் அரச மொழிக் கொள்கைகள் மற்றும் அமுல்படுத்துதல் தொடர்பான சட்டங்கள் பற்றிய கலந்துரையாடல்  மட்டக்களப்பு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டுக்கான அமைச்சின் அபிவிருத்தி மேலதிகச் செயலாளர் ஏ.நிக்கொலஸ்பிள்ளை, வழக்கறிஞர் ஷதிஸ் இஸ்மாயில், அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின்  பிரதிநிதி எஸ்.மோகன், அரச கருமமொழி ஆணையாளர் ஜே.டி.சி. ஜயசிங்க, அருச கருமமொழிகள் ஆணைக்குழுவின் நிர்வாக உத்தியோகத்தர் அபயக்கோன், பணிப்பாளர் நாயகம் பி.கேரத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.       

இக்கலந்துரையாடலின்போது, 'அரச மொழிக் கொள்கையும் அதனோடு தொடர்புடைய சட்ட ஏற்பாடுகளும்' எனும் தலைப்பில் வழக்கறிஞர் சகீஸ்மைல் உரையாற்றினார்.

அத்துடன், 'அரச கரும மொழிக் கொள்கைளை அமுல்படுத்துவது தொடர்பாக அரச கரும மொழிகள் திணைக்களம் கொண்டுள்ள பங்கு' தொடர்பில் அரச கரும மொழிகள் ஆணையாளர் ஜே.டி.சி ஜயசிங்க விளக்கமளித்தார்.

இதேவேளை அரச கரும மொழிகள் அமுலாக்கல் தொடர்பாக தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் செயற்பாடு தொடர்பில் பணிப்பாளர் நாயகம் பி.ஹேரத் விளக்கமளித்தார்.

இச்செயலமர்வில் அரச கரும மொழிகள் கொள்கை அமுலாக்கல் தொடர்பில் மக்கள் மத்தியிலும் அதிகாரிகள் மத்தியிலும் காணப்படும் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .