2026 மே 04, திங்கட்கிழமை

உற்பத்தி பொருட்களின் கண்காட்சி

Kogilavani   / 2013 மார்ச் 15 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷிட்


கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் உற்பத்தி பொருட்களுக்கான கண்காட்சி ஒன்று இன்று வெள்ளிக்கிழமை பிரதேச கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தொழில் முயற்சி வழங்கும் திட்டமான லோகோ திட்டம் மற்றும் திவிநெகும திட்டத்தினூடாக பொருட்களை உற்பத்தி செய்யும் பயனாளிகளினதும் உற்பத்திப் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பை எற்படுத்தி கொடுக்கும் முகமாகவும் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.தினேஸ் தலைமையில் இடம்பெற்ற இக்கண்காட்சியில் கிழக்கு மாகாண திட்டமிடல் செயலகத்தின் பிரதிப் பிரதம செயலாளர் வீ.மகேந்திர ராஜா, லோகோ புரோ திட்ட ஆலோசகர் புவேந்திரன், கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர் கே.அருந்தவராஜா, கிழக்கு மாகாண திட்டமிடல் செயலகத்தின்  உதவித் திட்டப் பணிப்பாளர் எம்.ஏ.மனாசிர், கோறளைப்பற்று பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன், கணக்காளர் சி.ஜெயந்திரா மற்றும் கிராம அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .