2026 மே 04, திங்கட்கிழமை

அபாயாவைக் களையமாட்டோம்: சல்மா அமீர் ஹம்ஸா

Kogilavani   / 2013 மார்ச் 18 , மு.ப. 03:23 - 11     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.நூர்தீன்

'என்ன நிலை வந்தபோதிலும் அபாயாவைக் களையமாட்டோம், அணிதிரண்டு போராடுவோம்' என காத்தான்குடி நகரசபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்ஸா தெரிவித்தார்.

மாதர் சங்கங்களின் மகளிர் தின நிகழ்வு காத்தான்குடி அல்ஹிறா வித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்றது.

மாதர் சங்கங்களின் இணைத் தலைவிகளின் தலைமையில் நிகழ்ந்த இந்நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே சல்மா அமீர் ஹம்ஸா இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'இஸ்லாமியப் பெண்கள் எமது நாட்டில் சுதந்திரமாக, அவர்களின் கலாசார ஆடைகளுடன் பயணிக்க முடியாத அச்சம் நிறைந்த சூழலினை அண்மைக்கால சம்பவங்களும் இனவாத உணர்வலைகளைத் தூண்டுகின்ற கோஷங்களும் நாளுக்கு நாள் எச்சரிக்கை செய்து கொண்டிருக்கிறது.

அண்மைக்காலமாக இஸ்லாமியப் பெண்கள் தலைநிமிர்ந்து தனிச் சிறப்புடன் வாழ்ந்து வருகிறார்கள்.

அவர்கள் பல சோதனைகளையும் வேதனைகளையும் துச்சமாக நினைத்து வெளிச்சத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும்போது இவற்றுக்கு முட்டுக்கட்டையாக சில இனவாதச் சிறுகுழுக்கள் செயற்பட்டுகொண்டு இருக்கின்றனர்.

இச்சிறுகுழுக்கள் அவர்களின் காழ்புணர்ச்சி காரணமாக, எமது பெண்களின் அடிப்படை ஆடைகளின் அர்த்தம் புரியாமல் அதனை மட்டுப்படுத்த அறிக்கைகள் இட்டுக் கொண்டிருக்கின்றனர்' என்று தெரிவித்தார்.

இதேவேளை, உலக நாகரிகத்தின் உன்னதமான ஆடை என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட 'அபாயா'வினை அணியக் கூடாது என்று சொல்வதற்கு இவர்களுக்கு என்ன அருகதையிருக்கிறது? உண்மையான முஸ்லிம் இஸ்லாத்திற்காக, அதன் நாகரிகத்தை காப்பாற்றுவதற்காக உயிரையும் கொடுத்த வரலாற்றுச் சொந்தக்காரர்களின் பரம்பரையில் வந்த நாம் இச் செய்தியைச் கூறும் மிலேச்சத்தனமானவர்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்;.

எமது பெண்ணினம் கல்வி ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். சட்டக் கல்லூரி, மருத்துவம் மற்றும் இன்னோரன்ன உயர்ந்த துறைகளில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் இருப்பது பெருமைக்குரியது.

பெரும்பான்மை சமுகத்தினர் ஒற்றுமையின் அவசியம் பற்றி ஒரு பக்கம் உணர்த்திக் கொண்டிருக்கும்போது, இனவாதம் பேசுகின்ற சிறு குழுவுக்கு சிறகு முளைத்தது எப்போது? இவர்களின் முயற்சியினை சுக்குநூறாக்கி தட்டிக்கேட்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு அனைவருக்குமுண்டு. ஏனெனில் இது சமூகப் பிரச்சினை. 

நாட்டில் முரண்பாடுகள் வளரக்கூடாது என்பதற்காக 'ஹலால்' சான்றிதலை விட்டுக்கொடுத்து இஸ்லாமியர்கள் முன்மாதிரியாக செயற்பட்டார்கள். இதேபோல் முஸ்லிம் பெண்களின் ஆடையாகிய அபாயாவினை விட்டுக் கொடுக்க ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. பெண்களுக்கு ஒழுக்கமான, பாதுகாப்பான ஆடை என உலகில் கண்டறியப்பட்ட ஆடை இந்த அபாயாதான்.

முஸ்லிம் அடிப்படைவாதிகள், புதிய சிந்தனையாளர்களின் கருத்துக்கள் என எமக்குள்ளேயே பிரிவினைகளை தோற்றுவிக்காமல் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் கரங்களைப் பலப்படுத்த வேண்டிய நல்ல தருணம் இதுவாகும். அதுமட்டுமன்றி பெண்கள் அமைப்புக்கள் அணிதிரண்டு தங்களது எதிர்ப்புக்களை இந்த பிரிவினைவாதிகளுக்கு காட்டவேண்டும்'  என்று அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 11

  • SH Monday, 18 March 2013 04:39 AM

    சரியா சொன்னீங்க சகோதரி

    Reply : 0       0

    KB Monday, 18 March 2013 05:39 AM

    உங்களுடைய நிலைப்பாட்டுக்கு நன்றி. ஆனால் முஸ்லிம் அரசியல் தலைமைகள் என்ன நிலைப்பாட்டை எடுப்பார்கள்? ஹலால் மாதிரி கைவிடுவார்களோ தெரியாது!

    Reply : 0       0

    vallarasu Monday, 18 March 2013 06:48 AM

    அமீர் ஹம்சா அவர்களே... உண்மையில் உங்கள் பேச்சை வர‌வேற்கிறோம்.முடியுமானால் சில ஊர்களுக்குச் சென்று பெண்கள் மத்தியில் விழிப்பூட்டும் படி வேண்டுகிறோம்.

    Reply : 0       0

    aj Monday, 18 March 2013 07:18 AM

    முகம் மூட சொல்லி எங்க சரி சொல்லி இருகிறதா ஆன்டி?
    எனக்கு தெரிய எங்கும் சொல்லவில்லை. கறுப்பு தான் அணியவேண்டும் என்று சொல்லி இருக்கா ஆன்டி? எனக்கு தெரிய எங்கும் இல்லை. இதை பல முஸ்லிம் நண்பர்களும் ஏற்றுக்கொண்டு இதை நிறுத்த சொல்லி கொண்டு இருக்கிறார்கள். எங்கு யாரோ பெண்களை அடிமை படுத்தி யாரோ கொடுக்கும் பணத்துக்கு இங்கு இதை செய்வது சரி இல்லை. ரிஷானா தலை வெட்டும்போது இந்த பெண்ணினம் எங்கு இருந்தது ஆன்டி? நேரத்துக்கு ஒரு பேச்சு. நேரத்துக்கு ஒரு சட்டம். கறுப்பு உடை அணித்து பல சட்டவிரோத செயல்கள் நாட்டில் அண்மைய காலமாக நடப்பது அதிகரித்து வருகிறது. பிரான்ஸ் போன்று முற்றிலும் தடை செய்வது சிறந்தது.

    Reply : 0       0

    M.A.A.Rasheed Monday, 18 March 2013 08:32 AM

    பௌத்தம் பிரிவினையினை கொண்ட ஒரு சமயமல்ல. இது சில சில்லறைகளின் வேலை. யாருக்கும் பயப்படும் சாதி முஸ்லிம்களல்ல. தாரே தக்பீர் அல்லாஹு அக்பர்.

    Reply : 0       0

    sharmila Monday, 18 March 2013 09:21 AM

    அபாயாவ பற்றி உங்ககிட்ட யாரு கேட்டது? ஃபர்தாவ கழட்ட சொன்னா அபாயாவ கழட்ட மாட்டன்... நல்ல கருத்து, அதோட நீங்க சாறிதானே உடுப்பீர்கள்....???

    Reply : 0       0

    al ameen Monday, 18 March 2013 10:26 AM

    YOUR SPEECH IS BETTER THAN, MALE MUSLIMS M.P.

    Reply : 0       0

    Markwilson Monday, 18 March 2013 11:25 AM

    இந்த AJ யின் துவேச கருத்துக்களை தமிழ் மிர்ரர் தணிக்கை செய்யாதா? ஒரு புலிக்குட்டி இங்கே துவேசம் வளர்கிறது, அது உங்களுக்கு தென்பட வில்லையா? எனது கமெண்ட்ஸ் ஐ எப்படியும் தணிக்கை செய்வீர்தானே?

    Reply : 0       0

    Markwilson Monday, 18 March 2013 11:27 AM

    AJ யின் அம்மாவுக்கு மூடி மறைக்காமல் போக செல்லுங்கள், சொந்த பெயரில் கமெண்ட்ஸ் பண்ண தைரியம் இல்லாத கோளை.

    Reply : 0       0

    IBNU ABOO. Monday, 18 March 2013 12:33 PM

    ஏ.ஜே ஏன் இஸ்லாமியர் மார்க்க சட்டத்தில் வீணாக மூக்கை நுழைக்கிறீர். இது உமது வழக்கமான வம்பு. உமது மக்கள் அடிபட்டு கிடக்கிறார்கள், அதைப்பற்றி கவலைப்படாமல்...

    Reply : 0       0

    முஸாபிர் Monday, 18 March 2013 12:36 PM

    இப்போதைக்கு கொஞ்சம் பேசாம இருங்க சிஸ்டர். ஹபாயா பத்தி அப்படி யாரும் ஒண்டும் சொல்லல. அவங்கள் உறுத்துறது அந்த முகமூடி புர்காதான்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .