2026 மே 04, திங்கட்கிழமை

வியட்நாம் தூதுவர் ஏறாவூருக்கு விஜயம்

Super User   / 2013 மார்ச் 25 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் டொன் சிங் தாங் இன்று திங்கட்கிழமை ஏறாவூர் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். எறாவூர் நகர முதல்வர் அலிஸாஹிர் மௌலானாவின் அழைப்பின் பேரிலேயே இவர் அங்கு விஜயம் செய்துள்ளார்.

வியட்நாம் பிரதித் தலைமைத் தூதுக் குழுவின் ஆலோசகர் பங் ட்ரொங் துவானும் தூதுவருடன் விஜயம் செய்தார்.
இங்கு கருத்து தெரிவித்த தூதுவர்,

"எங்களது யுத்தத்திற்குப் பின்னரான மீண்டெழுந்த அனுபவங்களை ஆயுத முரண்பாடுகளால் பாதிக்கப்பட்ட உங்களுடன் பகிர்ந்து கொண்டு இந்தப் பிரதேசங்களின் அபிவிருத்திக்கு உதவுவதில் மகிழ்ச்சியடைகின்றோம். எமது பொருளாதாரம் இப்பொழுது திறந்து விடப்பட்டுள்ளது. இது அபிவிருத்திக்கு ஒரு அடிப்படையாகும்.

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் நீண்ட நெடுங்கால வலுவான உறவு இருந்து வருகின்றது. இலங்கை அதன் ஆயுத முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வந்த பின்னர் அபிவிருத்திக்கான அதிகளவு வாய்ப்புக்கள் இந்த நாட்டில் நிறைந்திருக்கின்றன.

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலுள்ள சிறந்த ஒத்துழைப்பை இந்த அபிவிருத்தி வாய்ப்புக்களுக்கு நன்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். நாங்கள் வியட்னாமின் தூதுவர் என்கின்ற முறையில் இலங்கையின் மேல் மாகாணத்திலேதான் தங்கியிருக்கின்றோம். ஆகையினால் இந்த கிழக்குப் பிராந்தியம் தன்னகத்தே கொண்டுள்ள அபிவிருத்திக்கான சாத்தியத்தை மேம்படுத்த வேண்டும்.

கிழக்கு மாகாணம் அபிவிருத்திக்கான நிறைந்த சாத்தியங்களைக் கொண்டுள்ளது. அதனால் நாங்கள் கிழக்குப் பிராந்தியற்கு அபிவிருத்தியைக் குறிக்கோளாகக் கொண்டு இங்கு விஜயம் செய்துள்ளோம். மீன் வளம், சுற்றுலாத்துறை, மனித வளங்கள் எல்லாம் இங்கு நிறைந்து காணப்படுகின்றன" என்றார்.

இந்த சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் உதவிப் பணிப்பாளர் டொமிங்கோ ஜோர்ஜ் இங்குள்ள கடல் வளம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிதயன் சாத்தியப்பாட்டை வியட்நாம் தூதுவருக்கு விளக்கினார். வியட்நாம் தூதுக் குழுவினர் ஏறாவூர் புன்னைக்குடா கடற்கரையோர மீன்பிடிப் பகுதிக்கும் விஜயம் செய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .