2026 மே 04, திங்கட்கிழமை

பனிச்சங்கேணியில் காணப்பட்டவை மாட்டெலும்புகள்

Super User   / 2013 மார்ச் 25 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


வாகரை, பனிச்சங்கேணிப் பிரதேசத்தின்  தோட்டமொன்றில் மீட்கப்பட்ட எலும்புகள் மாட்டினுடையது என நீரூபிக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை நீதிவான் நீதிமன்ற நீதிபதி முஹமட் றியாழ் தலைமையில் இந்த எலும்புக் கூடுகள் மீட்கப்பட்ட இடம் இன்று திங்கட்கிழமை மாலை தோண்டப்பட்டது.

அவ்வேளையிலேயே அந்த இடத்திலிருந்து மேலும் மாட்டெலும்புகள் கண்டெடுக்கப்பட்டதாக வாகரைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித ஜயரத்ன தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை பனிச்சங்கேணியில் உள்ள நிலமொன்றில் உல்லாச விடுதி நிர்மாணத்துக்காக நிலம் தோண்டப்பட்டபோது எலும்புகள் கண்டெடுக்கப்பட்டிருந்தன.

அது பற்றி அந்தக் காணியின் உரிமையாளர் வாகரைப் பொலிஸாருக்கு முறைப்பாடு பதிவு செய்திருந்தார். இதனையடுத்து குறித்த அந்தப் பிரதேசத்திற்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.

மேலதிக விசாரணைகளுக்காகவும் ஆய்வுகளுக்காகவும் இன்று குறித்த இடத்திற்கு நீதவான் விஜயம் செய்தார். இதன்போது, நீதவான் முன்னிலையில் தோண்டப்பட்ட போது அங்கு புதைக்கப்பட்டிருந்தவை மாட்டெலும்புகளே என்று உறுதிப்படுத்தப்பட்டது.

இந்தப் பகுதியில் உக்கிப்போன மனித எச்சங்கள் காணப்பட்டதாக வெளியான தகவலையடுத்து மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .