2026 மே 04, திங்கட்கிழமை

வாழைச்சேனை கடதாசிக் கம்பனி காணியை சுவீகரிக்க அரசியல்வாதிகள் திட்டம்: யோகேஸ் எம்.பி

Menaka Mookandi   / 2013 மார்ச் 26 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.நூர்தீன்

வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள தேசிய கடதாசிக் கம்பனியை மூடிவிட்டு அக்கம்பனி அமைந்துள்ள காணியை சுவீகரிக்க அரசியல்வாதிகள் சிலர் திட்டமிட்டிருந்தார்கள்' என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலைக்கு விஜயம் செய்த அவர், அங்கு நடைபெற்ற பூஜை வழிபாடுகளிலும் கலந்து கொண்டார். பின்னர் வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலையின் தவிசாளர் தேசமான்ய மங்கள செனரத் மற்றும் உயர் அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'இந்த தேசிய கடதாசி கம்பனியில் எனது தந்தையின் உழைப்பும் அடங்கியிருப்பதால் இங்கு இதுவரை காலமும் என்ன நடந்தது என்று எனக்கு தெரியும்' என்றார்.

'இந்த கடதாசி ஆலையில் சகல இனங்களும் ஒற்றுமையாக பணிபுரிகின்றனர். இந்த கடதாசி ஆலையை கட்டியெழுப்புகின்ற போது மூவின இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையும் இங்கிருந்து கட்டியெழுப்பப்படும்' என்று சுட்டிக்காட்டினார்.

'நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கோப் கூட்டத்தில் இத்தேசிய கடதாசி ஆலை தொடர்பாக பலர் பல கேள்விகளை தொடுத்த போது அவை தொடர்பாக நான் சிறந்த விளக்கங்களை கொடுத்துள்ளேன்.

இப்பிரதேசத்திலுள்ள உள்ள அரசியல்வாதிகள் இத்தேசிய கடதாசி கம்பனியை மூடிவிட்டு காணியை சுவீகரிக்க திட்டமிட்டிருந்தார்கள் என்பது எனக்கு தெரியும்' என்றும் குறிப்பிட்டார்.

கம்பனியை இயக்குவதற்கு என்னாலான பூரண ஒத்துழைப்பினை வழங்குவேன். ஜப்பான் தூதரக அதிகாரிகளுடன் விசேட பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தி இந்த கடதாசி கம்பனியை புனருத்தாரணம் செய்யுமாறும் வேண்டுகோளை விடுத்துள்ளேன். இந்த பூமி யாருக்கும் சொந்தமல்ல. வாழும் வரை மட்டுமே நமக்கு சொந்தமானது எனவே எல்லோரும் ஒற்றுமையாக வாழ்வோம்' என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

  Comments - 0

  • vallarasu Tuesday, 26 March 2013 03:52 PM

    அது கடதாசிக் கொம்பனி என்றாலும் இப்போ எங்கள் கொம்பனி...

    Reply : 0       0

    seyon Wednesday, 27 March 2013 04:41 AM

    எதிர்கட்சியில் இருக்கும் உங்களால் என்ன செய்ய முடியும்? இன்னும் ஏமாற்ற வேண்டாம் ஐயா!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .