2026 மே 04, திங்கட்கிழமை

கிழக்கு மாகாணத்தின் பிராந்திய அலுவலகத்தை செயற்றிறன் மிக்க அலுவலகமாக மாற்ற நடவடிக்கை

Suganthini Ratnam   / 2013 மார்ச் 28 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.நூர்தீன்


மட்டக்களப்பு, காத்தான்குடியிலுள்ள முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்கு மாகாணத்திற்கான  பிராந்திய அலுவலகத்தை இவ்வாண்டு செயற்றிறன் மிக்கதொரு அலுவலகமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஸமீல் நழீமி தெரிவித்தார்.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தினை பிரதிநிதிகளை  நேற்று புதன்கிழமை மாலை சந்திப்பின்போதே இவர் இவ்வாறு கூறினார்.

காத்தான்குடியில் அமையப்பெற்றுள்ள முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்கு மாகாணத்திற்கான  பிராந்திய அலுவலகம் வசதி வாய்ப்பின்றி இயங்கி வருகின்றது. இதனால் இன்று அது ஒரு செயற்றிறன் மிக்க அலுவலகமாக இல்லை. இந்த அலுவலகத்துக்கான வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்தி ஒரு செயற்றிறன் மிக்கதொரு அலுவலகமாக மாற்ற இவ்வாண்டில் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

தான் முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களில் ஏராளமான பிரச்சினைகள் வந்துள்ளன. இவை அனைத்தும் பள்ளிவாசல்கள் தொடர்பான பிரச்சினைகளாகுமெனவும் அவர் கூறினார்.

அன்றாடம் தமது திணைக்களத்திற்கு பள்ளிவாசல்கள் தொடர்பான பிரச்சினைகள் கிடைக்கின்றன.

பள்ளிவாசல்களுக்கு ஒரே நிர்வாகம் பல வருடங்களாக இருப்பது, பள்ளிவாசல்களின் கணக்கறிக்கைகள் சரியாக பேணப்படுவதில்லை, போன்ற பல்வேறு பிரச்சினைகள் பள்ளிவாசல்கள் தொடர்பாக நாளாந்தம் வருகின்றன.

ஆனால் இந்த காத்தான்குடியிலிருந்து இவ்வாறான பள்ளிவாசல்களின் பிரச்சினைகள் தமது திணைக்களத்திற்கு வருவதில்லை. அதற்கு காரணம் இந்த காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் இங்கு சிறப்பாக இயங்குவதனாலேயே ஆகும். காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் பள்ளிவாசல்களின் செயற்பாட்டுக்கு இந்த பகுதியில் சிறந்த வழிகாட்டல்களை வழங்கி வருகின்றது என்பதை தான் நன்கு அறிந்துள்ளதாகவும் அவர் கூறினார்;.

எதிர்காலத்தில் தமது திணைக்களத்தின் செயற்பாட்டை மேலும் சிறப்பாக செய்ய ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாலில் சம்மேளனத்தின் பிரதி தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத், மற்றும் செயலாளர் மௌலவி ஏ.எம்.அப்துல் காதர், உப செயலாளர் ஏ.எம்.சாதகீன் உட்பட அதன் முக்கியஸ்த்தர்கள் உலமாக்கள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .