2026 மே 04, திங்கட்கிழமை

வறிய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 மார்ச் 28 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


வாழைச்சேனை, கருங்காலிச்சோலை ஸ்ரீ கிருஷ்ணா வித்தியாலய வறிய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினரால், அமெரிக்காவிலுள்ள போரினால் காயப்பட்டவர்களுக்கும் விதவைகளுக்கும், வறியவர்களுக்குமான அமைப்பின் உதவி மூலம் இவ் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
 
இங்கு கல்வி கற்கும் வறிய மாணவர்கள் ஒருவருக்கு தலா நானூறு ரூபாய் வீதம் 56 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
 
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் இவ் உபகரணங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .