2026 மே 04, திங்கட்கிழமை

காத்தான்குடி நகர சபை உறுப்பினரை தாக்க முயற்சி

Super User   / 2013 மார்ச் 28 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.நூர்தீன்

காத்தான்குடி நகர சபை உறுப்பினர் அலி சப்ரியை தாக்க முற்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்திக்காக தோண்டப்படும் மண்ணை ஏற்றி விற்பனை செய்வதை தடுக்க முயன்றபோதே இவர் தாக்க முற்பட்டுள்ளனர். மண்ணை ஏற்றிய நபரே இந்த தாக்குலை மேற்கொள்ள முயற்சித்துள்ளார்.

புதிய காத்தான்குடி மீன்பிடி இலாஹா வீதியில் வடிகாலமைப்பதற்காக இன்று வியாழக்கிழமை மடு தோண்டப்பட்டுள்ளது. தோண்டப்பட்ட அந்த மண் ஏற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதை அறிந்த காத்தான்குடி நகர சபை உறுப்பினர் அலி சப்ரி குறித்த இடத்திற்கு விரைந்து மண்ணை ஏற்றி விற்பனை செய்வதை தடுக்க முயன்ற போது மண்ணை ஏற்றியவர் நகர சபை உறுப்பினரை தாக்க முற்பட்டடுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டள்ளது.

இந்த வியடம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீதி அபிவிருத்திக்காக தோண்டப்படும் மண்னை புதிய காத்தான்குடி பதுறியா ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடிக்கு கொட்ட வேண்டும் என்ற தீர்மானம் காத்தான்குடி நகர சபையினால் எடுக்கப்பட்ட நிலையில் இந்த மண் ஏற்றி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபை உறுப்பினர் அலி சப்ரி தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .