2026 மே 04, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் விபத்து; மூவர் பலி

Kogilavani   / 2013 மார்ச் 29 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுபுன் டயஸ், ரவீந்திரன்
, எம்.எஸ்.நூர்தீன், ஜவ்பர்கான், வி.சக்திவேல்

மட்டகளப்பு, புத்தடி நாகதம்பிரான் ஆலயத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர்.

இவ் விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலே பலியாகியுள்ளதுடன் ஏனைய இருவர் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.

வீதியால் பயணித்த டொல்பின் ரக வான் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி, மற்றும் துவிச்சக்கர வண்டி, வீதியில் நின்றுகொண்டிருந்தவர்களுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில், வே.பரமானந்தம் (50 வயது), ஈ.திலீபன் (32 வயது), ரவீந்திரன் (31 வயது) ஆகியோரே பலியாகியுள்ளனர்.

டொல்பின் ரக வாகன சாரதியை களுவாஞ்சிகுடி பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .