2026 மே 04, திங்கட்கிழமை

தமிழ் மொழி மூல தெங்கு அபிவிருத்தி ஆராய்ச்சிப் பயிற்சி நிலையம் திறப்பு

Kogilavani   / 2013 ஏப்ரல் 07 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


இலங்கையின் முதலாவது தமிழ் மொழி மூல தெங்கு அபிவிருத்தி ஆராய்ச்சி பயிற்சி நிலையம் மட்டக்களப்பு- பாசிக்குடாவில் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சர் ஜகத் புஸ்பகுமார இலங்கையின் முதலாவது தமிழ் மொழி மூல தெங்கு ஆராய்ச்சிப் பயிற்சி நிலையத்தை திறந்து வைத்து பயிற்சியையும் ஆரம்பித்து வைத்தார்.

இங்கு உரையாற்றிய அமைச்சர்,

'1978 ஆம் ஆண்டு இந்தப் பகுதியைத் தாக்கிய சூறாவளி மட்டக்களப்பு மாவட்டத்தில் தென்னைப்பயிர்களுக்கு ஒரு பேரழிவை ஏற்படுத்தி விட்டுச்சென்றது.

அதற்குப் பிறகு தென்னை மரங்களை மீள் நடுகை செய்து இந்தப் பிரதேசத்தில் பழைய நிலைமைக்கு தெங்கு உற்பத்தியைக் கொண்டுவருவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் யாவும் தோல்வியைத் தழுவின.

2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தனது இரண்டாவது பதவிப் பிரமாணத்தின்போது அமைக்கப்பட்ட அமைச்சரவையிலே தென்னை அபிவிருத்திக்கென்று பிரத்தியேக பலமுள்ள அமைச்சொன்றைத் தோற்றுவித்தார்.

தெங்குத் தொழிற்துறையை ஊக்குவிக்க ஜனாதிபதி அன்று தொடங்கிய ஒரு முன்மாதிரியான முயற்சிதான் இந்த அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சாகும்.

இந்த அமைச்சு இப்பொழுது தென்னை அபிவிருத்தி செய்ய பல்வேறு முயற்சிகளை நாடு முழுதும் முன்னெடுத்து வருகிறது.

ஒப்பீட்டளவில் இலங்கையின் ஏனைய மாகாணங்களை விட கிழக்கு மாகாணம் தெங்கு அபிவிருத்தியில் அதிக அக்கறை எடுத்து முன்னணியில் இருப்பதை பெருமையுடன் சுட்டிக்காட்டவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தை நாம் தெங்கு உல்லாசப் பயணிகளைக் கவரும் பூமியாக மாற்ற உத்தேசித்துள்ளோம்.
அதன் மூலம் உள்ளூர் வாசிகள் பலருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழில் வாய்ப்புக் கிடைக்கும்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .