2026 மே 04, திங்கட்கிழமை

மாலைதீவு உள்ளூராட்சிமன்ற தலைவர் - அமைச்சர் சேகுதாவூத் சந்திப்பு

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 07 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.நூர்தீன்

தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள மாலைதீவு நாட்டின் கத்தூதீவுக்கான உள்ளூராட்சிமன்றத் தலைவர் முஹமட் றிசான், ஊக்குவிப்பு உற்பத்தித்திறன் விருத்தி அமைச்சர் பசீர் சேகுதாவூதை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

மட்டக்களப்பு ஏறாவூரில் உள்ள அமைச்சரின் இல்லத்தில் நேற்றுமுன்தினம்  சனிக்கிழமை இந்த சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது அமைச்சர் பசீர் சேகுதாவூதை மாலைதீவிலுள்ள தமது பகுதிக்கு வருமாறும் முஹமட் றிசான் அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் எப்போதும்; ஒரு இறுக்கமான இணைப்புள்ளது என தெரிவித்த முஹமட் றிசான், தற்போது இலங்கையில் யுத்தத்திற்கு பின்னர் அமைதியான அச்சமற்ற சூழ்நிலை காணப்படுவது குறித்து தான் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார்.

கடந்த காலங்களை விட, இன்று இலங்கையின் கிழக்கு மாகாணம் அபிவிருத்தி கண்டுள்ளது.

மேலும், தான் இலங்கைக்கு முன்னர் வந்தபோது பொலிஸ் மற்றும் இராணுவ சோதனைச்சாவடிகளை கண்டுள்ளதாகவும் ஆனால் இன்று அவ்வாறான எந்தச் சோதனைச்சாவாடிகளும் இல்லை என்பதையும் தான் அவதானித்துள்ளதாகவும் முஹமட் றிசான் கூறினார்.

இன்று ஒரு சிறந்த இலங்கை நாட்டை பார்ப்பது குறித்து தான் மகிழ்ச்சியடைவதாகக் கூறிய அவர், மாலைதீவுக்கு இலங்கையின் பல்வேறு உற்பத்திகள் வருகின்றன எனவும் கூறினார்.

அதேபோன்று மாலைதீவில் இலங்கையை சேர்ந்த பலர் பல்வேறு தொழில்களில் ஈடுபடுகின்றனர். மாலைதீவை சேர்ந்த மாணவர்கள் பலரும் இலங்கையில் கல்வி கற்று வருகின்றனர்.இவ்வாறு இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் நெருங்கிய நட்பும் இரு இணைப்பும் இருந்து வருகின்றன எனவும் அவர் கூறினார்.

இந்த சந்திப்பில் மாலைதீவு உள்ளூராட்சிமன்ற உறுப்பினர் முகம்மட் அலி ஸாப் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் என்.கே.றம்ழான்; கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .