2026 மே 04, திங்கட்கிழமை

செங்கலடியில் கணவனும் மனைவியும் கொலை

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 08 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.அப்துல் ஹுஸைன், ரி.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.நூர்தீன், தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் வர்த்தகர் ஒருவரும்  அவரது மனைவியும் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செங்கலடிப் பகுதியிலேயே நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடை ஒன்றின் உரிமையாளரான சிவகுரு ரகு (வயது 48)  மற்றும் அவரது மனைவியான  ரகு விப்ரா (வயது 41) ஆகியோரே இவ்வாறு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தங்களது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வேளையிலேயே இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணையை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர சம்பவம் நடைபெற்ற இடத்திற்குச் சென்றுள்ளார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .