2026 மே 04, திங்கட்கிழமை

மட், வாழைச்சேனை புகையிரத நிலையங்களின் செயற்பாடுகள் கணினி மயப்படுத்தப்பட்டுள்ளன

Kogilavani   / 2013 ஏப்ரல் 09 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.நூர்தீன்

மட்டக்களப்பு, மற்றும் வாழைச்சேனை புகையிரத நிலையங்களின் செயற்பாடுகள்  கணினி மயப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் பிரதி நிலைய பொறுப்பதிகாரி  ஏ.ஜே.அப்துல் கபூர் தெரிவித்தார்.

இதற்கமைவாக மேற்படி புகையிரத நிலையங்களில் முன்கூட்டியே ஆசனப்பதிவு செய்வோர் இணையதளத்தின் மூலமும் ஆசனப்பதிவை மேற்கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, வெலிக்கந்த மற்றும் பொலனறுவை, ஹிங்குராகொட புகையிரத நிலையங்களும் கணினி மயப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
'மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மற்றும் வாழைச்சேனை ஆகிய இரண்டு புகையிரத நிலையங்களிலுமே இந்த கணினி வசதிகள் காணப்படுகின்றன.

எறாவூர் புகையிரத நிலையத்தில் இந்த வசதி இல்லாததால் இங்கு ஆசனப்பதிவுகள் மேற்கொள்ள முடியாது.

அதேநேரம் அதிகரிக்கப்பட்ட புகையிரத கட்டணத்தின் அடிப்படையில் மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்கு முதலாம் வகுப்பு இருக்கைக்காக 1250ரூபாவும், இரண்டாம் வகுப்பு இருக்கைக்காக 630ரூபாவும், மூன்றாம் வகுப்பு இருக்கைக்காக 480ரூபாவும் சாதரண இரண்டாம் வகுப்பு இருக்கைக்காக 580 ரூபாவும் அறவிடப்படும்.

இதேவேளை, இரவில் பயணிக்கும் அரைசொகுசு புகையிரதத்தில் சாதரண மூன்றாம் வகுப்பு இருக்கைகளுக்காக 380ரூபாவும் அறவிடப்படும்' என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .