2026 மே 04, திங்கட்கிழமை

அச்சுறுத்திய புடையன் பாம்புகளில் ஒன்று அகப்பட்டது

Kogilavani   / 2013 ஏப்ரல் 09 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.நூர்தீன், ஜவ்பர்கான்


காத்தான்குடி பிரதேசத்தின் அட்வகேட் அப்துல் காதர் மாவத்தையிலுள்ள பிரதேச மக்களை பல நாட்களாக அச்சுறுத்தி வந்த புடையன் பாம்புகளில் ஒன்று அடித்து கொல்லப்பட்டுள்ளது.

பிரதேச மக்கள் இந்த பாம்பை பிடித்து கொலைச்செய்தது மட்டுமன்றி மக்களின் பார்வைக்கு தொங்கவிட்டனர்.

கோழி பண்ணைகள் மற்றும் கோழி அறுக்கும் இடங்கள் இந்த வீதியில் இருப்பதனால் அதிகளவான புடையன் பாம்புகள் வந்து செல்கின்றன.
அத்துடன் இந்த புடையன் பாம்புகள் வீடுகளுக்கு சென்று மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இந்த வீதியிலுள்ள மக்கள் பெரும் அச்சத்துடன் இருந்து வருவதுடன் இரவு நேரங்களிலும் இந்த வீதயில் நடமாடுவதற்கு அச்சமடைகின்றனர்.

'கோழி மடுவத்தினால் பாம்பு தொல்லை' என சுலோகமொன்றையும் இந்த பிரதேச மக்கள் குறித்த கோழிஅறுக்கும் மடுவத்திற்;கு முன்பாக தொங்க விட்டிருந்தனர்.

இந்த கோழி அறுக்கும் மடுவத்தினை மூடி இந்த பிரதேச மக்களை பாம்புகளின் தொல்லையிலிருந்து பாதுகாக்குமாறு பிரதேச மக்கள் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரியிடம் முறையிட்டதையடுத்து காத்தான்குடி பிரதேச சுகாதார பரிசோதகர்கள் குழுவொன்று குறிப்பிட்ட இடத்திற்கு இன்று காலை சென்று பார்வையிட்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .