2026 மே 04, திங்கட்கிழமை

விபத்தில் இளைஞன் பலி; சிறுவன் காயம்

Super User   / 2013 ஏப்ரல் 09 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதியதால் அதனைச் செலுத்திச் சென்ற இளைஞர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்து 12 வயதுச் சிறுவன் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் கிரான் பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இரண்டு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொல்லப்பட்டவரான சதாசிவம் சத்தியபாபு வயது 19 என்பவரது சடலம் தற்சமயம் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .