2026 மே 04, திங்கட்கிழமை

குடும்பத்தை பாதுகாப்பவர்களை பாதுகாப்போம் நிகழ்வு

Kogilavani   / 2013 ஏப்ரல் 10 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.உருத்திரன்


'குடும்பத்தை பாதுகாப்பவர்களை பாதுகாப்போம்' என்ற தலைப்பிலான சட்ட ஆலோசனை நிகழ்ச்சி திட்டமொன்று மட்டக்களப்பு, வாகரை மகாவித்தியாலயத்தில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது.

இலங்கை பெண்கள் சட்டத்தரணிகள் சங்கமும் வாகரை பொலிஸாரும் இணைந்து நடத்தினர்.

வாகரை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித்த ஜெயரட்ண தலைமையில் நடைபெற்ற இந்நிகழவில் நீதிபதி ஏ.எம்.எம்.றியாழ், பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.இராகுலநாயகி, 233ஆவது படையணித் தளபதி சிறிநாத் ஆரியசிங்க, இலங்கை பெண்கள் சட்டத்தரணிகள் சங்கத் தலைவி சட்டத்தரணி ஜமுனா குலசேகர, உப தலைவி குமுதிகா சேனரட்ன, செயலாளர் பத்ம டி சில்வா, சட்டத்தரணி கலாநிதி ஏ.எல்.ஏ.கபூர், உள நல வைத்திய அதிகாரி மற்றும் கிரமசேவகர் கல்வி அதிகாரிகள் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, 14 - 18 வயதிற்குட்பட்ட பிள்ளைகளும் அவர்களது பெற்றோர்களும் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் சேவையினைப் பாராட்டி பெண்கள் சட்டத்தரணிகள் சங்க தலைவியினால நினைவுச் சின்னமொன்று வழங்கி வைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .