2026 மே 04, திங்கட்கிழமை

முதியோர், விசேட தேவையுடையோரக்கு நிவாரணம் வழங்கிவைப்பு

Kogilavani   / 2013 ஏப்ரல் 11 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எஸ்.சசிகுமார், சக்திவேல், தேவ அச்சுதன்


கடந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வவுணதீவுப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட முதியோருக்கும் விசேட தேவைக்குட்பட்டவர்ளுக்கும் புதவருடத்தை முன்னிட்டு நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அனுசரணையில், பிரதேச செயலாளர் வெ.தவராசா தலைமையில் நேற்று புதன்கிழமை வுணதீவுப் பிரதேச செயலக கேட்போர் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, சுமார் 250 நிவாரண பொதிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ், மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஐன் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .