2026 மே 04, திங்கட்கிழமை

சாசனவியல் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 ஏப்ரல் 11 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.நூர்தீன்


இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட சாசணவியல் பயிற்சி பட்டறையை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் நேற்று  மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் வைத்து வழங்கப்பட்டன.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் திருமதி ஹேமலோஜினிகுமரன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் பேராசரிரியர் எம்.பத்மநாதன்,  சிரேஷ்ட ஆராய்ச்சி உத்தியோகத்தர் திருமதி தேவகுமாரி கரன், யாழ்.பல்கலைக்கழக இந்து நாகரீக துறை விரிவுரையாளர் திருமதி நாச்சியார் செல்வநாயகம, மற்றும் றுகுனு பல்கலைக்கழக விரிவுரையாளர் தம்மிக ஜெயசிங்க, மட்டக்களப்ப இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எழில்வாணி பத்மகுமரன் உட்பட பல்கலைக்கழக மாணவர்களும் கலந்துகொண்டனர்.

இந்த சாசணவியல் பயிற்சி பட்டறை கடந்த 2ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நேற்று புதன்கிழமை நிறைவடைந்தது.

இதில் கிழக்கு மற்றும் தென்;கிழக்கு, யாழ்ப்பாணம் ஆகிய பல்கலைக்கழகங்களின் கலைத்துறையைச் சேர்ந்த 100 மாணவர்கள பங்குபற்றினர்.
இந்த பயிற்சி பட்டறையானது கிழக்கு மாகாணத்தில் முற்தடவையாக நடாத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எழில்வாணி பத்மகுமரன் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .