2026 மே 04, திங்கட்கிழமை

புதிய பயிற்சி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டிவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 12 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.நூர்தீன்,-ரி.எல்.ஜவ்பர்கான்.-எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடியிலுள்ள கால்நடை உற்பத்தி சுகாதார பயிற்சி நிலையத்தில் புதிய பயிற்சி நிலைய கட்டிடமொன்று நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நேற்று வியாழக்கிழமை நாட்டி வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி, அமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் இதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி, அமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமடின் மாகாண அமைச்சின் நன்கொடை நிதியிலிருந்து இக்கட்டிடத்திற்கு 70 இலட்சம் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி, அமைச்சின் செயலாளர் கே.பத்மநாதன், கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணி;ப்பாளர் டாக்டர் ரி.கே.தவராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .