2026 மே 04, திங்கட்கிழமை

வாவியில் பாதுகாப்பற்ற பாதைப் பயணம்

Super User   / 2013 ஏப்ரல் 17 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


வெருகல் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் வரும் சீனன்வெளி, உப்பூறல் கிராமத்து மக்கள் பெரும் போக்குவரத்து நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர்.

இலங்கைத் துறையிலிருந்து இலங்கைத்துறை முகத்துவாரத்தைக் கடக்கும் பாதை பாதுகாப்பற்ற நிலையிலுள்ளதே இதற்கு காரணமாகும்.

வாவியைக் கடக்கும் பாதையின் ஒரு பக்கத்தின் பிடிக்கும் பகுதி கழன்று விழுந்துள்ளதால் பயணிகள் பிடி பகுதி உள்ள மற்றப் பக்கத்தில் மாத்திரம் பிடித்துக் கொண்டு நிற்கவேண்டியுள்ளது.

இது மிகவும் ஆபத்தான பயணம் என்று பயணிகள் குறிப்பிடுகின்றனர். ஏனெனில் ஒரு பக்கத்தில் மாத்திரம் பயணிகள் குவிந்து நிற்கும் பொழுது பாதையின் பாரம் ஒரு பக்கம் அதிகரித்து சமநிலை இழந்து பாதை கவிழ்ந்து வாவியில் மூழ்கிவிட நேரிடும் என்று அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால், அதிர்ஷ்டவசமாக இதுவரை அப்படியானதொரு பேராபத்துக்கள் எதுவும் நடந்து விடவில்லை. எனினும் அது நடக்காது என்று அறுதியிட்டுக் கூறிவிடவும் முடியாது என்று பயணிகள் தெரிவிக்கின்றனர்.

பொருட் கொள்வனவு, சந்தை வசதி, பிரதேச செயலக அலுவல்கள், வைத்திய வசதிகள் சகலவற்றிற்கும் இந்தப் பிரதேச மக்கள் பாதைப் போக்குவரத்து மூலம் வாவியை கடந்து ஈச்சிலம்பற்றுக்கு வரவேண்டியுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .