2026 மே 04, திங்கட்கிழமை

இலவச காணியும் உறுதியும் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 ஏப்ரல் 20 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர் தாமரைக்கேணி அல்-அக்ஷா அகதிகள் குடியேற்றக் கிராமத்தில் மிகவும் வறுமைகோட்டின் கீழ் வாழும் தமிழ், முஸ்லிம் இன மக்களுக்கு இலவசமாக காணித்துண்டுகளும் உறுதியும் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.

தாமரைக்கேணி அல் அகஷா அகதிகள் கிராமத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விவசாய விளைபொருட்கள் உற்பத்திச் சங்கத்தின் தலைவர் எம்.அப்துல் ஹலீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இலவச காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களையும் காணி விண்ணப்பப் படிவத்தினையும் மேற்படி கிராம மக்களுக்கு வழங்கிவைத்தார்.

சுமார் இருபது தமிழ், முஸ்லிம் குடும்பங்களுக்கு இதன்போது காணிகளுக்கான பத்திரங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் நொத்தாரிசு எம்.ஐ.எம்.நூ;தீன் சார்பில் அவரது உதவியாளரான ஏ.என்.எம்.இஸ்மாயில் ஜே.பி, மற்றும் விவசாய விளைபொருட்கள் உற்பத்திச் சங்கத்தின் செயலாளர் எம்.எல்.அப்துல் றஹுமான் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

சமூகத் தொண்டரும் கொடையாளியுமான எம்.அப்துல் ஹலீம் தனது சொந்தக் காணிகளையே ஏழைகளான தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு வழங்கியுள்ளார் என்பதனால் கிராம வாசிகள் அவருக்குப் பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .