2026 மே 04, திங்கட்கிழமை

வன்செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 ஏப்ரல் 20 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாக்கியநாதன்,எம்.எஸ்.நூர்தீன், ஜவ்பார்கான்


கிழக்கு மாகாணத்தில் பயங்கரவாத வன்செயல்கள் காரணமாக பாதகிக்கப்பட்டவர்களுக்கான நட்ட ஈடுகள் வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு தேபா மண்டபத்தில் நடைபெற்றது.

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் கீழுள்ள புனர்வாழ்வு அதிகார சபையினால் இந்த நட்டஈட்டுக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான காசோலைகளை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், அமைச்சர் பசீர் சேகுதாவூத், பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, விநாயக மூர்த்திமுரளிதரன், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஜி.எஸ்.விதானகே, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் உட்பட புனர்வாழ்வு அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது கிழக்கு மாகாணத்தில் பயங்கரவாத வன்செயல்கள் காரணமாக  உயிர்களை இழந்த, காயமடைந்த மற்றும் சொத்துக்களை இழந்த பொதுமக்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தாகள் 500 பேருக்கு 32 மில்லியன் ரூபா நட்டஈட்டு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .