2026 மே 04, திங்கட்கிழமை

இரவிலும் இயங்கும் மட்டு. வாசிகசாலை

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 23 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாநகர வாசகர்களினதும் மற்றும் மாணவர்களினதும் நன்மை கருதி நகர பிரதான வாசிகசாலை காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை முதல் இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய பத்திரிகைப்பகுதி, உசாத்துணைப்பகுதி, சிறுவர் பகுதி, கேட்போர் கூடம் மற்றும் இரவல் பகுதி என்பன இரவு 8 மணிவரை இயங்குவதாக மாநகர ஆணையாளர் கே.சிவநாதன் தெரிவித்தார்.

கேட்போர்கூடம் தவிர்ந்த பத்திரிகைப் பகுதியை சுமார் 200 பேரும், ஏனைய பகுதிகளை தலா 100 பேரும் பாவிப்பதாகவும் கூறினார்.

இதேவேளை மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கல்லடி வாசிகசாலையை அடுத்த வாரமளவில் இரவு வரை இயங்க வைப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர சபையின் கட்டுப்பாட்டின் கீழ் 9 வாசிகசாலைகள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .