2026 மே 04, திங்கட்கிழமை

யாசகரின் சடலம் பாலத்திலிருந்து மீட்பு

Kanagaraj   / 2013 ஏப்ரல் 25 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு நகருக்குள் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு புதுப்பாலத்தில் இருந்தே அவரது சடலம் புதன்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்தே பொலிசாருக்கு பொதுமக்களின் உதவியுடன் சடலத்தை மீட்டுள்ளனர்.

குறித்த சடலம் மட்டக்களப்பு நகருக்குள் பிச்சை எடுத்து வந்தவரின் சடலமென மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.
விஷேட தேவையுடவரான மேற்படி நபரின் ஊன்றுகோலும் பாலத்தின் கிடந்ததையும் கண்டெடுத்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சடலம் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் இவர் அடையாளம் காணப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவருடைய ஊன்றுகோல் கைநழுவியதையடுத்து அவர் பாலத்தினுள் வீழ்ந்து உயிரிழந்திருக்கலாமென தெரிவித்த மட்டக்களப்பு பொலிசார் இது தொடர்பாக விசாரணைகளை நடாத்திவருவதாகவும் குறிப்பிட்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .