2026 மே 04, திங்கட்கிழமை

வாகரையில் மாதிரி பழத் தோட்ட கிராமம் நிர்மாணம்

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 25 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினது முயற்சியினால் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வட்டவான் எனும் கிராமத்தில் மாதிரி பழத் தோட்டம் கிராமம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது.

சுமார் 70 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இம்மாதிரி பழத்தோட்ட கிராமத்தில், திவிநெகும திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 25 பயனாளிகளைக் கொண்டு இப்பழத்தோட்டம் பராமரிக்கப்பட உள்ளது.

பழத்தோட்டத்தில் பழமரக் கன்றுகள் நடும் வைபவம் கடந்த புதன்கிழமை வாகரை பிரதேச செயலாளர் செல்வி ஆர்.ராகுலநாயகி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாணசபை உறப்பினரும் ஜனாதிபதியின் ஆலோகசருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பழக் கன்றுகளை வழங்கி வைத்ததுடன் பழ மரக் கன்றுகளையும் நாட்டிவைத்தார்.

வாழை, பலா, கொய்யா, மா, தோடை மற்றும் மாதுளை போன்ற பழமரக் கன்றுகள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன. இதில் வாகரை பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர், கிராம சேவையாளர், விவசாய போதனாசிரியர்கள், கிரமத் தலைவர் உட்பட கிராம மக்கள் மற்றும் பிரதேச செயலகத்தின் உத்தியோகஸ்த்தர்களும் கலந்து கொண்டார்கள்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .