2026 மே 04, திங்கட்கிழமை

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் புதிய பிரிவுகள் திறப்பு

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 26 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்


மட்டக்களப்பு வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தகவல் சேகரிப்பு நிலையமும், குழந்தை பராமரிப்பு மற்றும் தாய்ப்பால் ஊட்டல் முகாமைத்துவ நிலையமும் மாட்டத்தில் உள்ள 14 சுகாதார பிரிவுகளில் முதல் தடவையாக கடந்த புதன்கிழமை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இதற்கான நிதி அனுசரனையை வாழைச்சேனை வேள் விஷன் நிறுவணம் வழங்கியுள்ளது. சுகாதார வைத்திய அதிகாரி ஏ.திசநாயக்க தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.எவ். றகுமான், வேள்விஷனின் சர்வதேச காரியாலய அதிகாரி கரோலின் குலோடியா,சிறப்பு அதிதியாக தொற்றா நோய்க்களுக்கான வைத்தியர் ஆர்.நவலோஜிதன்,சுகாதார வைத்திய அத்தியட்சகர் எஸ்.தட்சணாமூர்த்தி,மகற்பேற்று நிபுணர் டாக்டர் எஸ்.சரவணன், கோறளைப்பற்று வேள்விஷன் முகாமையபளர் பி.றோகாஷ், வேள்விஷன் இலங்கைக்கான சுகாதார மற்றும் போசாக்கிற்கான பொறுப்பதிகாரி டில்கா, ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையம் திறக்கப்படுவதனால் குழந்தை பிறப்பதற்க்கு முதல் பிள்ளைகளை பராமரிப்பது தொடர்பாகவும் குழந்தை பிறந்த பிறகுள்ள தாய்ப்பால் ஊட்டல் சம்பந்தமான செயல்முறை வழிகாட்டல் அறிவூடடல்கள் கர்பிணி தாய்மாருக்கு வழங்கமுடியும், இப்பிரதேச கர்ப்பினி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அதிக நண்மை பெறக்கூடிய வாய்புள்ளது. இவ்வசதியை வழங்கிய வாழைச்சேனை வேள்விஷன் நிறுவணத்திற்க்கு நன்றியை தெரிவிப்பதாக பிராந்திய சுகாதார பணிப்பாளர் தமது உரையின் போது தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .