2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 15 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், மாணிக்கப்போடி சசிக்குமார்


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான ஒருநாள் செயலமர்வு நேற்று சனிக்கிழமை நடத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இளைஞர், யுவதிகள்  மத்தியில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவியுடன் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு அலுவலகத்தினால் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு அலுவலகத்தில் நடைபெற்ற இச்செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும் 60 இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டனர்.

இவர்களுக்கான  சான்;றிதழ்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணி;ப்பாளர் எம்.எல்எம்.என்.நைறூஸ் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன், அதன் அதிகாரி எம்.கசீர், மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி ஜே.கலாராணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X