2025 மே 05, திங்கட்கிழமை

கைதிகள் விடுதலையாகும்போது முழு மனிதனாகச் செல்ல வேண்டும்: கித்சிறி பண்டார

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 16 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


சிறைச்சாலையிலிருந்து கைதிகள் விடுதலையாகிச் செல்லும்போது முழு மனிதனாகச் செல்ல வேண்டும் என  மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம அத்தியட்சகர் ஏ.கித்சிறி பண்டார தெரிவித்தார்.

சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள  கைதிகளின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் உரையாற்றுகையில்,

'சிறைக் கைதிகள் சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகிச் செல்லும்போது அவர்கள் தொழிற்பயிற்சி பெற்ற முழு மனிதனாகச் செல்ல வேண்டும் என்பதற்காக சிறைச்சாலையில் பல்வேறு தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மேசன் தொழிற்பயிற்சி, வயரிங் தொழிற்பயிற்சி உள்ளிட்ட  பல்வேறு தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்த தொழிற்பயிற்சிகளைக் கொண்டு இவர்கள் விடுதலையாகி வெளியில் செல்லும்போது முழு மனிதனாக வெளியில் செல்கின்றனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் கழகமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று எதிர்வரும் டிசெம்பர் மாதம் நடைபெறவுள்ள சாரணர் ஜம்போரியில் இந்த சிறைச்சாலையிலிருந்தும் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும்,  22 வயதுக்குட்பட்ட கைதிகளுக்கு சித்திரம் வரைவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு கைதிளை ஒரு முழு மனிதனாக மாற்றும் செயற்றிட்டம் சிறைச்சாலைக்குள் இடம்பெற்று வருகின்றன' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X