2025 மே 05, திங்கட்கிழமை

விசேட தேவையுடையவர்களுக்கான சமாதான கலைவிழா

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 16 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன், ரி.எல்.ஜவ்பர்கான்,
எம்.எஸ்.எம்.நூர்தீன்

சமூக சேவைகள் அமைச்சின் அனுசரணையுடன் மொறட்டுவை கல்வி சமூக கலாசார நிறுவகத்தின் (எஸ்.கோ) ஏற்பாட்டில் விசேட தேவையுடையவர்களுக்கான சமாதான கலைவிழா 2013 நேற்று (15) மாலை சத்துருக்கொண்டான் சர்வோதய நிலையத்தில் நடைபெற்றது.

இரு நாட்களாக இடம்பெற்ற இக்கலை விழாவின் இறுதிநாளான இன்று நாடு முழுவதுமுள்ள 20 விசேட தேவையுடையவர்களின் இல்லங்களிலிருந்து 450 பேர் பங்கு கொண்டனர்.

கடந்த 30 வருடங்களாக நடனம், சங்கீதம், பாட்டு, கலை மற்றும் கைவேலை  போன்ற துறைகளில் போட்டிகள் இடம்பெற்றன இவ்வருடம் இப்போட்டிகள் மட்டக்களப்பில் நடாத்தப்பட்டன.

வெற்றி பெற்றவர்களுக்கான விருதுகளும் மற்றும் சான்றிதழ்களும் சமூக சேவைகள் அமைச்சின் பிரதியமைச்சர் சந்திரசிறி சூரியாராச்சி, சர்வோதய ஸ்தாபகர் கலாநிதி ஏ.ரி. ஆரியரட்ண ஆகியோர் வழங்கி வைத்தனர். அமைச்சின் செயலாளர் இமில்டா சுகுமார், அமைச்சின் பணிப்பாளர் சுஜீத் ரவீந்திர உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை, விசேட தேவையுடைய சிறுவர் இல்லங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட இருவர்களின் பெற்றோர்களுக்கு வீடுகள் அமைப்பதற்கான உதவிகளுமம் இதன்போது  வழங்கப்பட்டன. குறித்த சிறுவர்களுக்கு தலா 250,000 ரூபா பெறுமதியான காசோலையை பெற்றோரிடம் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X